உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 20:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்தாதீர்கள்.+ யெகோவாவின் பெயரை வீணாகப் பயன்படுத்துகிறவர்களை அவர் தண்டிக்காமல் விட மாட்டார்.+

  • யோபு 4:18-20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 கடவுள் தன்னுடைய ஊழியர்களை நம்புவதே இல்லை.

      தன்னுடைய தூதர்களிடமே* குறை கண்டுபிடிக்கிறார்.

      19 அப்படியென்றால், மண்ணில் அஸ்திவாரம் போட்டு,+

      களிமண் வீடுகளில் குடியிருந்து,

      பூச்சி* போல எளிதில் நசுக்கிக் கொல்லப்படும் மனுஷன் எந்த மூலைக்கு?

      20 காலையில் இருக்கிறான், சாயங்காலத்துக்குள் இருந்த இடம் தெரியாமல் போய்விடுகிறான்.

      நிரந்தரமாக அழிக்கப்படுகிறான்; யாரும் கண்டுகொள்வதில்லை.

  • யோபு 22:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 “மனுஷனால் கடவுளுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?

      ஒருவன் விவேகமாக* இருப்பதால் அவருக்கு என்ன பயன்?+

       3 நீ நீதிமானாக இருப்பதைப் பார்த்து சர்வவல்லமையுள்ளவர் சந்தோஷப்படுகிறாரா?

      நீ உத்தமமாக இருப்பதால் அவருக்கு ஏதாவது லாபம் கிடைக்கப்போகிறதா?+

  • யோபு 25:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 அவருடைய கண்களுக்கு நிலவுகூட பிரகாசமாக இல்லை.

      நட்சத்திரங்களும் தூய்மையாக இல்லை.

       6 அப்படியிருக்கும்போது, சாதாரண மனுஷன் எந்த மூலைக்கு!

      அவன் அவருக்குமுன் ஒரு சின்ன புழுவைப் போலத்தானே இருக்கிறான்!” என்று சொன்னான்.

  • யோபு 42:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 8 இப்போது ஏழு காளைகளையும் ஏழு செம்மறியாட்டுக் கடாக்களையும் எடுத்துக்கொண்டு என் ஊழியன் யோபுவிடம் போங்கள். அங்கே உங்கள் பாவத்துக்காக அவற்றைத் தகன பலி செலுத்துங்கள். என் ஊழியன் யோபு உங்களுக்காக ஜெபம் செய்வான்.+ அவன் என்னைப் பற்றிச் சரியாகப் பேசியதுபோல் நீங்கள் பேசவில்லை. ஆனாலும், உங்களுடைய முட்டாள்தனத்துக்காக உங்களைத் தண்டிக்க வேண்டாமென்று அவன் என்னிடம் கெஞ்சுவான். என் ஊழியன் யோபுவுடைய ஜெபத்தை நான் நிச்சயமாகக் கேட்பேன்” என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்