10 இருந்தாலும், முதன்மை குருமார்களும் வேத அறிஞர்களும் திரும்பத் திரும்ப எழுந்து நின்று அவர்மேல் கடுமையாகக் குற்றம்சாட்டினார்கள். 11 அப்போது, ஏரோது தன் படைவீரர்களோடு சேர்ந்து அவரை அவமதித்தான்.+ அவருக்கு ஆடம்பரமான உடையை உடுத்தி கேலி செய்தான்.+ பின்பு, பிலாத்துவிடமே திருப்பி அனுப்பினான்.