4 தாவீதின் ஆட்கள் அவரிடம், “இன்றைக்கு யெகோவா உங்களிடம், ‘நான் உன்னுடைய எதிரியை உன் கையில் கொடுக்கிறேன்,+ நீ அவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்’ என்று சொல்கிறார்” என்றார்கள். அதனால், தாவீது எழுந்து சத்தமில்லாமல் போய், சவுல் போட்டிருந்த கையில்லாத அங்கியின் ஓரத்தை வெட்டி எடுத்தார்.