8 அப்போது அபிசாய் தாவீதிடம், “இன்றைக்குக் கடவுள் உங்களுடைய எதிரியை உங்கள் கையில் கொடுத்துவிட்டார்.+ ஒரு வார்த்தை சொல்லுங்கள், ஈட்டியால் அவரை ஒரே குத்தாகக் குத்திப்போடுகிறேன், அடுத்த குத்துக்கு அவசியமே இருக்காது” என்றார்.
23 யெகோவாதான் அவரவருடைய நீதிக்கும் உண்மைக்கும் தகுந்தபடி அவரவருக்கு* பலன் அளிப்பார்.+ இன்றைக்கு யெகோவா உங்களை என் கையில் கொடுத்தார். ஆனால், யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்ட உங்களைக் கொல்ல எனக்கு மனம் வரவில்லை.+