2 காற்றில் மறைந்துபோகும் புகைபோல் அவர்களை நீங்கள் மறைந்துபோகச் செய்யுங்கள்.
நெருப்புக்கு முன்னால் மெழுகு உருகுவதுபோல்,
கடவுளுக்கு முன்னால் பொல்லாதவர்கள் அழிந்துபோகட்டும்.+
3 ஆனால், நீதிமான்கள் சந்தோஷப்படட்டும்.+
கடவுளுக்கு முன்னால் பூரிப்படையட்டும்.
ஆனந்தமும் மகிழ்ச்சியும் அடையட்டும்.