உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 23:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 உங்கள் எல்லை செங்கடலிலிருந்து பெலிஸ்தியர்களின் கடல்* வரைக்கும், வனாந்தரத்திலிருந்து ஆறு* வரைக்கும் இருக்கும்.+ அங்கிருக்கிற ஜனங்களை உங்கள் கையில் கொடுப்பேன், அவர்களை நீங்கள் துரத்தியடிப்பீர்கள்.+

  • 1 ராஜாக்கள் 4:21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஆறு* தொடங்கி, பெலிஸ்தியர்களின் தேசம் வரையிலும் எகிப்தின் எல்லை வரையிலும் இருந்த எல்லா தேசங்களையும் சாலொமோன் ஆட்சி செய்தார்.+ சாலொமோனின் வாழ்நாள் முழுவதும் அந்தத் தேசங்களைச் சேர்ந்த மக்கள் அவருக்குக் கப்பம் கட்டி சேவை செய்தார்கள்.+

  • சங்கீதம் 2:8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 நீ கேட்டால், தேசங்களை உனக்குச் சொத்தாகக் கொடுப்பேன்.

      பூமி முழுவதையுமே உனக்குச் சொந்தமாகத் தருவேன்.+

  • சங்கீதம் 22:27, 28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 27 பூமியெங்கும் இருக்கிறவர்கள் யெகோவாவை நினைத்துப் பார்த்து அவரிடம் திரும்புவார்கள்.

      பூமியிலுள்ள எல்லா குடும்பங்களும் உங்கள் முன்னால் தலைவணங்கும்.+

      28 ஏனென்றால், யெகோவாதான் ராஜா.+

      எல்லா ஜனங்களையும் ஆளுகிறவர் அவர்தான்.

  • தானியேல் 2:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 அப்போது, இரும்பும் களிமண்ணும் செம்பும் வெள்ளியும் தங்கமும் ஒட்டுமொத்தமாக நொறுங்கி, கோடைக் காலத்தில் களத்துமேட்டிலிருந்து பறந்துபோகும் பதரைப் போலப் பறந்துபோயின. இருந்த இடமே தெரியாதபடி அவை காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. ஆனால், சிலையை மோதிய அந்தக் கல் ஒரு பெரிய மலையாகி, முழு பூமியையும் நிரப்பியது.

  • சகரியா 9:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 எப்பிராயீமிடமிருந்து போர் ரதத்தைப் பறித்துக்கொள்வேன்.

      எருசலேமிடமிருந்து குதிரையைப் பிடுங்கிக்கொள்வேன்.

      வில்லை எடுத்துக்கொள்வேன்.

      அவர் தேசங்களுக்குச் சமாதானத்தை அறிவிப்பார்.+

      ஒரு கடலிலிருந்து இன்னொரு கடல் வரைக்கும்,

      ஆறு* தொடங்கி பூமியின் எல்லைகள் வரைக்கும் அவர் ஆட்சி செய்வார்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்