9 தீவுகள் என்மேல் நம்பிக்கை வைக்கும்.+
தொலைதூரத்திலிருந்து உன் மகன்களையும்,+
வெள்ளியையும் தங்கத்தையும் ஏற்றிக்கொண்டு,
தர்ஷீசின் கப்பல்கள் முன்வரிசையில் வருகின்றன.
உன் கடவுளும் இஸ்ரவேலின் பரிசுத்தருமான யெகோவாவின் பெயருக்குப் புகழ் சேர்க்க வருகின்றன.
அவர் உன்னை மகிமைப்படுத்துவார்.+