-
அப்போஸ்தலர் 13:34-37பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 அவர் இனி ஒருபோதும் அழிந்துபோகாதபடி கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார். இதைப் பற்றித்தான், ‘நான் தாவீதுக்கு வாக்குறுதி கொடுத்தபடியே உங்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுவேன், என் வாக்குறுதி நம்பகமானது’ என்று தெரிவித்திருக்கிறார்.+ 35 வேறொரு சங்கீதத்தில், ‘உங்களுக்கு உண்மையாக* இருப்பவரின் உடல் அழிந்துபோக விடமாட்டீர்கள்’ என்றும் சொல்லியிருக்கிறார்.+ 36 தாவீது தன்னுடைய வாழ்நாள் காலத்தில் கடவுளுக்குச் சேவை செய்துவிட்டு* கண்மூடினார். பின்பு, தன்னுடைய முன்னோர்களோடு அடக்கம் செய்யப்பட்டார், அவருடைய உடல் அழிந்துபோனது.+ 37 ஆனால், கடவுளால் உயிரோடு எழுப்பப்பட்டவரின் உடல் அழிந்துபோகவில்லை.+
-