-
யாத்திராகமம் 16:12-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 “இஸ்ரவேலர்கள் முணுமுணுத்ததை நான் கேட்டேன்.+ நீ அவர்களிடம், ‘சாயங்காலத்தில் நீங்கள் இறைச்சியைச் சாப்பிடுவீர்கள், காலையில் உணவைத் திருப்தியாகச் சாப்பிடுவீர்கள்.+ அப்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா நானே என்று தெரிந்துகொள்வீர்கள்’+ என்று சொல்” என்றார்.
13 அன்றைக்குச் சாயங்காலம், காடைகள் பறந்து வந்து முகாமை மூடிக்கொண்டன.+ காலையில் முகாமைச் சுற்றிலும் பனி பெய்திருந்தது. 14 பனி மறைந்த பின்பு, சிறுசிறு மணிகள் போன்ற ஏதோவொன்று வனாந்தரமெங்கும் கிடந்தது.+ அது மென்மையான உறைபனி போலத் தரையெங்கும் கிடந்தது. 15 இஸ்ரவேலர்கள் அதைப் பார்த்தபோது, “இது என்ன?” என்று ஒருவரை ஒருவர் கேட்டுக்கொண்டார்கள். அது என்னவென்று அவர்களுக்குத் தெரியவில்லை. மோசே அவர்களிடம், “நீங்கள் சாப்பிடுவதற்காக யெகோவா தந்திருக்கிற உணவு இது.+
-