உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 16:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 பனி மறைந்த பின்பு, சிறுசிறு மணிகள் போன்ற ஏதோவொன்று வனாந்தரமெங்கும் கிடந்தது.+ அது மென்மையான உறைபனி போலத் தரையெங்கும் கிடந்தது.

  • யாத்திராகமம் 16:35
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 35 40 வருஷங்களாக இஸ்ரவேலர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள்.+ கானான் தேசத்தின்+ எல்லைக்கு வந்து சேரும்வரை+ அவர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்கள்.

  • யாத்திராகமம் 16:31, 32
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 இஸ்ரவேல் ஜனங்கள் அந்த உணவுக்கு “மன்னா”* என்று பெயர் வைத்தார்கள். அது வெள்ளையாகவும் கொத்துமல்லி விதையைப் போலவும் இருந்தது. அதன் ருசி தேன் கலந்த அப்பத்தைப் போல இருந்தது.+ 32 பின்பு மோசே, “யெகோவா கட்டளையிடுவது இதுதான்: ‘இதில் ஒரு ஓமர் அளவு எடுத்து, தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வையுங்கள்.+ ஏனென்றால், உங்களை எகிப்து தேசத்திலிருந்து கூட்டிக்கொண்டு வந்தபோது வனாந்தரத்தில் நான் தந்த உணவை வருங்காலத் தலைமுறைகள் பார்க்க வேண்டும்’” என்றார்.

  • எண்ணாகமம் 11:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அந்த மன்னா,+ பார்ப்பதற்குக் கொத்துமல்லி விதை போலவும்,+ வெள்ளைப் பிசின்* போலவும் இருந்தது.

  • உபாகமம் 8:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவர் உங்களுக்குத் தாழ்மையைக் கற்றுக்கொடுத்தார். மனுஷன் உணவால்* மட்டுமல்ல, யெகோவாவின் வாயிலிருந்து வருகிற ஒவ்வொரு வார்த்தையாலும் உயிர்வாழ்வான்+ என்பதை உங்களுக்குப் புரிய வைப்பதற்காக உங்களைப் பசியில் வாடவிட்டார்.+ நீங்களோ உங்கள் முன்னோர்களோ அதுவரை பார்க்காத மன்னாவை+ உணவாகத் தந்தார்.

  • யோவான் 6:31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 வனாந்தரத்தில் எங்களுடைய முன்னோர்கள் மன்னாவைச் சாப்பிட்டார்களே,+ ‘அவர்கள் சாப்பிடுவதற்காகப் பரலோகத்திலிருந்து அவர் உணவு தந்தார்’+ என எழுதப்பட்டிருக்கிறதே” என்று சொன்னார்கள்.

  • 1 கொரிந்தியர் 10:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 அவர்கள் எல்லாரும் மோசேயைப் பின்தொடர்ந்தபோது மேகத்தாலும் கடலாலும் ஞானஸ்நானம் பெற்றார்கள். 3 கடவுள் கொடுத்த உணவையே எல்லாரும் சாப்பிட்டார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்