உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 14:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 சாலேமின் ராஜாவாகிய+ மெல்கிசேதேக்கு+ ஆபிராமுக்கு ரொட்டியும் திராட்சமதுவும் கொண்டுவந்தார். அவர் உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்துவந்த குருவாக இருந்தார்.+

  • எபிரெயர் 5:5, 6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 அதேபோல், கிறிஸ்துவும் தன்னைத் தானே தலைமைக் குருவாக்கிக்கொள்வதன் மூலம் தன்னை மகிமைப்படுத்திக்கொள்ளவில்லை;+ “நீ என்னுடைய மகன்; இன்று நான் உனக்குத் தகப்பனாக ஆனேன்”+ என்று அவரிடம் சொன்னவர்தான் அவரை மகிமைப்படுத்தினார். 6 வேறொரு வசனத்தில், “மெல்கிசேதேக்கைப் போலவே நீ என்றென்றும் குருவாக இருக்கிறாய்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+

  • எபிரெயர் 6:19, 20
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 அந்த நம்பிக்கை+ நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது; திரைச்சீலைக்குள் போக அது நம்மை வழிநடத்துகிறது.+ 20 மெல்கிசேதேக்கைப் போலவே என்றென்றும் தலைமைக் குருவாகியிருக்கிற+ நம் முன்னோடியான இயேசு+ நம் சார்பில் அந்தத் திரைச்சீலைக்குள் போயிருக்கிறார்.

  • எபிரெயர் 7:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 அவருடைய தாய் தகப்பனைப் பற்றி யாருக்கும் தெரியாது. அவரைப் பற்றிய வம்ச வரலாறும் கிடையாது; அவர் எப்போது பிறந்தார், எப்போது இறந்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால், அவர் கடவுளுடைய மகனைப் போல் ஆக்கப்பட்டார், அவர் என்றென்றும் குருவாக இருக்கிறார்.+

  • எபிரெயர் 7:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட திருச்சட்டத்தில் லேவி கோத்திரத்தின் குருத்துவம் ஓர் அம்சமாக இருந்தது. அந்தக் குருத்துவத்தின் மூலம்தான் ஒருவன் பரிபூரணமாக ஆவான்+ என்றால், ஆரோனைப் போல் இல்லாமல் மெல்கிசேதேக்கைப் போல்+ வேறொரு குரு தோன்ற வேண்டிய அவசியம் என்ன?

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்