12 ஏனென்றால், அந்த ராத்திரி நான் எகிப்தைக் கடந்துபோவேன். அப்போது, இந்தத் தேசத்தில் இருக்கிற மூத்த மகன்கள் எல்லாரையும் மிருகங்களுடைய முதல் குட்டிகள் எல்லாவற்றையும் சாகடிப்பேன்.+ எகிப்தின் தெய்வங்கள் எல்லாவற்றையும் தண்டிப்பேன்.+ நான் யெகோவா.
29 நடுராத்திரியில், எகிப்து தேசத்திலிருந்த மூத்த மகன்கள் எல்லாரையும் யெகோவா கொன்றுபோட்டார்.+ சிம்மாசனத்தில் உட்கார்ந்திருந்த பார்வோனுடைய மூத்த மகன்முதல் சிறைச்சாலையில் இருந்த கைதியின் மூத்த மகன்வரை எல்லாரையும் கொன்றுபோட்டார். மிருகங்களுடைய முதல் குட்டிகளையும் கொன்றுபோட்டார்.+