-
1 சாமுவேல் 16:6, 7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 அவர்கள் அங்கே வந்தார்கள். சாமுவேல் எலியாபைப்+ பார்த்தபோது, “நிச்சயம் இவனைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்திருப்பார்” என்று நினைத்துக்கொண்டார். 7 ஆனால் யெகோவா சாமுவேலிடம், “இவன் தோற்றத்தையோ உயரத்தையோ பார்க்காதே.+ நான் இவனைத் தேர்ந்தெடுக்கவில்லை. மனிதன் பார்ப்பதுபோல் நான் பார்ப்பதில்லை. மனிதன் வெளித்தோற்றத்தை மட்டும்தான் பார்க்கிறான். ஆனால், யெகோவாவாகிய நான் இதயத்தைப் பார்க்கிறேன்”+ என்று சொன்னார்.
-
-
1 நாளாகமம் 28:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 சாலொமோனே, என் மகனே, உன் அப்பாவின் கடவுளை நன்றாகத் தெரிந்துகொள், அவருக்கு முழு இதயத்தோடு+ சந்தோஷமாக* சேவை செய். யெகோவா எல்லாருடைய இதயத்தையும் ஆராய்ந்து பார்க்கிறார்.+ மனதில் இருக்கிற ஒவ்வொரு யோசனையையும் நோக்கத்தையும் அவர் தெரிந்து வைத்திருக்கிறார்.+ நீ அவரைத் தேடினால், அவரைக் கண்டடைய உதவி செய்வார்.+ நீ அவரை விட்டுவிட்டால், அவரும் உன்னை நிரந்தரமாக ஒதுக்கிவிடுவார்.+
-