15 நான் உன்னோடு இருப்பேன், நீ போகும் இடமெல்லாம் உன்னைப் பாதுகாப்பேன். உன்னை இந்தத் தேசத்துக்குத் திரும்பி வரப் பண்ணுவேன்.+ நான் உனக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவேன், உன்னைக் கைவிடவே மாட்டேன்”+ என்று சொன்னார்.
14 ஏதோமில், சொல்லப்போனால் ஏதோம் முழுவதிலும், காவல்படைகளை நிறுத்திவைத்தார். ஏதோமியர்கள் எல்லாரும் தாவீதுக்குச் சேவை செய்ய ஆரம்பித்தார்கள்.+ அவர் போன இடமெல்லாம் அவருக்கு வெற்றி கிடைக்க யெகோவா உதவி செய்தார்.+