28 ஜனங்களின் வம்சங்களே, யெகோவாவுக்குச் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்,
யெகோவாவின் மகிமைக்கும் பலத்துக்கும் செலுத்த வேண்டிய புகழைச் செலுத்துங்கள்.+
29 யெகோவாவின் பெயருக்குக் கொடுக்க வேண்டிய மகிமையைக் கொடுங்கள்;+
காணிக்கையோடு அவர் முன்னால் வாருங்கள்.+
பரிசுத்த உடையில் யெகோவாவை வணங்குங்கள்.+