19 “உங்கள் வேலைக்காரன் எனக்கு இப்படிச் செய்தான்” என்று தன்னுடைய மனைவி சொன்னதைக் கேட்டதும் அவருக்குப் பயங்கர கோபம் வந்தது. 20 அதனால் யோசேப்பைப் பிடித்து, அரசு கைதிகள் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலையில் போடக் கட்டளையிட்டார். யோசேப்பு அந்தச் சிறைச்சாலையிலேயே அடைபட்டுக் கிடந்தார்.+