1ஆரம்பத்தில் வார்த்தை என்பவர் இருந்தார்,+ அந்த வார்த்தை கடவுளோடு இருந்தார்,+ அந்த வார்த்தை தெய்வீகத்தன்மை உள்ளவராக இருந்தார்.+2 அவர் ஆரம்பத்தில் கடவுளோடு இருந்தார். 3 எல்லாம் அவர் மூலமாகத்தான் உண்டானது,+
14 அந்த வார்த்தை ஒரு மனிதராகி*+ நம் மத்தியில் குடியிருந்தார். அவருடைய மகிமையைப் பார்த்தோம். அந்த மகிமை தகப்பனிடமிருந்து ஒரே மகனுக்கு*+ கிடைக்கும் மகிமையாக இருந்தது. அவர் அளவற்ற கருணையும்* சத்தியமும் நிறைந்தவராக இருந்தார்.