-
நெகேமியா 5:8, 9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 நான் அவர்களிடம், “நம்முடைய யூத சகோதரர்கள் மற்ற தேசத்தாரிடம் விற்கப்பட்டிருந்தார்கள். நாங்கள் முடிந்தளவுக்கு அவர்களை மீட்டுக்கொண்டு வந்தோம். இப்போது அவர்களை நீங்களே விற்கலாமா?+ அவர்களை மறுபடியும் நாங்கள் மீட்க வேண்டுமா?” என்று கேட்டேன். அவர்கள் பதில் சொல்ல முடியாமல் அமைதியாகிவிட்டார்கள். 9 பின்பு நான் அவர்களிடம், “நீங்கள் செய்வது கொஞ்சம்கூட சரியில்லை. நீங்கள் நம்முடைய கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டாமா?+ எதிரிகள் நம்மைக் கேவலமாகப் பேசுவதற்கு இடம் கொடுக்கலாமா?
-