16 அதற்கு சாத்ராக்கும் மேஷாக்கும் ஆபேத்நேகோவும், “நேபுகாத்நேச்சார் ராஜாவே, இந்த விஷயத்தைப் பற்றி நாங்கள் உங்களிடம் பேச வேண்டியதே இல்லை. 17 எரிகிற நெருப்புச் சூளையில் நீங்கள் எங்களை வீசினாலும், நாங்கள் வணங்குகிற கடவுளால் அந்தச் சூளையிலிருந்தும் உங்கள் கையிலிருந்தும் எங்களைக் காப்பாற்ற முடியும்.+