-
1 சாமுவேல் 26:8-10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 அப்போது அபிசாய் தாவீதிடம், “இன்றைக்குக் கடவுள் உங்களுடைய எதிரியை உங்கள் கையில் கொடுத்துவிட்டார்.+ ஒரு வார்த்தை சொல்லுங்கள், ஈட்டியால் அவரை ஒரே குத்தாகக் குத்திப்போடுகிறேன், அடுத்த குத்துக்கு அவசியமே இருக்காது” என்றார். 9 ஆனால் தாவீது அபிசாயிடம், “அவரை ஒன்றும் செய்துவிடாதே! யெகோவாவினால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்மேல்*+ கை வைத்துவிட்டு, அந்தக் குற்றத்திலிருந்து யாராவது தப்பிக்க முடியுமா?”+ என்று கேட்டார். 10 அதோடு, “உயிருள்ள கடவுளாகிய யெகோவாமேல் ஆணையாகச் சொல்கிறேன்,* யெகோவாவே அவரைப் பழிவாங்குவார்.+ இல்லையென்றால், அவர் இயற்கையாகவோ போரிலோ சாவார்,+ அந்த நாள் கண்டிப்பாக வரும்.+
-
-
சங்கீதம் 37:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
சதித்திட்டங்கள் தீட்டி அவற்றைச் சாமர்த்தியமாக நடத்திக் காட்டுகிற
மனுஷனைப் பார்த்து நீ எரிச்சலடையாதே.+
-