உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோபு 26:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 இவையெல்லாம் அவருடைய வழிகளின் ஓரங்கள்தான்!+

      அவரைப் பற்றி நம் காதில் விழுந்திருப்பதெல்லாம் ரொம்பவே லேசான சத்தம்தான்!

      அப்படியிருக்கும்போது, அவர் உண்டாக்குகிற மாபெரும் இடிமுழக்கத்தை யார்தான் புரிந்துகொள்ள முடியும்?”+ என்று சொன்னார்.

  • சங்கீதம் 40:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  5 என் கடவுளாகிய யெகோவாவே,

      எங்களுக்காக நீங்கள் செய்திருக்கிற அதிசயங்கள் எத்தனை எத்தனை!

      எங்களுக்காக நீங்கள் யோசித்திருக்கிற விஷயங்கள் எத்தனை எத்தனை!+

      அவை கணக்கில் அடங்காதவை!+

      அவற்றையெல்லாம் நான் விவரித்துச் சொல்ல ஆரம்பித்தால் முடிக்கவே முடியாது.

      கடவுளே, உங்களைப் போன்றவர் வேறு யாருமே இல்லை!+

  • பிரசங்கி 8:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 பிறகு, உண்மைக் கடவுள் செய்கிற எல்லாவற்றையும் பற்றி யோசித்துப் பார்த்தேன். சூரியனுக்குக் கீழே நடக்கிற விஷயங்களை மனுஷர்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதைத் தெரிந்துகொண்டேன்.+ என்னதான் முயற்சி செய்தாலும், அவர்களால் அவற்றைப் புரிந்துகொள்ளவே முடியாது. அவற்றைத் தெரிந்துகொள்கிற அளவுக்கு ஞானம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டாலும், அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது.+

  • ரோமர் 11:33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 33 ஆ! கடவுளுடைய ஆசீர்வாதங்கள்* எவ்வளவு மகத்தானவை! அவருடைய ஞானமும் அறிவும் எவ்வளவு ஆழமானவை! அவருடைய நீதித்தீர்ப்புகள் ஆராய முடியாதவை! அவருடைய வழிகள் கண்டறிய முடியாதவை!

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்