6 அப்போது ரெகொபெயாம் ராஜா பெரியோர்களிடம்,* அதாவது தன்னுடைய அப்பாவான சாலொமோனின் காலத்தில் ஆலோசகர்களாக இருந்தவர்களிடம், “இந்த மக்களுக்கு என்ன பதில் சொல்லலாம், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
12ரெகொபெயாமின் ஆட்சி உறுதியாக நிலைநாட்டப்பட்டு,+ அவர் வலிமையுள்ள ராஜாவாக ஆனவுடனே யெகோவாவின் சட்டத்தை ஒதுக்கித்தள்ளினார்;+ அவருடன் இருந்த இஸ்ரவேலர்கள் எல்லாரும் அவரைப் போலவே நடந்துகொண்டார்கள்.
9 எகிப்தின் ராஜாவான சீஷாக் எருசலேம்மீது படையெடுத்து வந்தான்; யெகோவாவின் ஆலயத்தில் இருந்த பொக்கிஷங்களையும்+ அரண்மனையில் இருந்த பொக்கிஷங்களையும் எடுத்துக் கொண்டுபோனான். சாலொமோன் செய்து வைத்திருந்த தங்கக் கேடயங்கள் உட்பட எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டுபோனான்.+