-
1 ராஜாக்கள் 4:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 இஸ்ரவேல் முழுவதையும் கவனித்துக்கொள்ள 12 நிர்வாகிகளை சாலொமோன் நியமித்திருந்தார். ராஜாவுக்கும் அவருடைய அரண்மனையில் இருந்தவர்களுக்கும் தேவையான உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் ஒவ்வொருவரும் வருஷத்தில் ஒவ்வொரு மாதம் உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்.+
-
-
1 ராஜாக்கள் 10:4, 5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 எல்லா விஷயங்களிலும் சாலொமோனுக்கு இருந்த ஞானம்,+ அவர் கட்டிய அரண்மனை,+ 5 மேஜையில் பரிமாறப்பட்ட உணவு,+ ஊழியர்கள் உட்கார்ந்திருந்த வரிசை, உணவு பரிமாறப்பட்ட விதம், பரிமாறுகிறவர்களின் உடை, பானம் பரிமாறுகிற ஆட்கள், யெகோவாவின் ஆலயத்தில் அவர் வழக்கமாகச் செலுத்திய தகன பலிகள் ஆகியவற்றைப் பார்த்து சேபா தேசத்து ராணி வாயடைத்துப்போனாள்.*
-