உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பிரசங்கி 5:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 மனுஷன் எதைச் செய்வது நல்லது என்றும் தகுந்தது என்றும் நான் புரிந்துகொண்டேன்: சாப்பிட்டு, குடித்து, சூரியனுக்குக் கீழே உண்மைக் கடவுள் கொடுத்திருக்கிற குறுகிய வாழ்நாளில் தன் உழைப்புக்கெல்லாம் சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும்.+ இதுதான் அவனுக்குக் கிடைக்கும் பலன்.+ 19 அதுமட்டுமல்ல, உண்மைக் கடவுள் ஒருவனுக்குச் சொத்துப்பத்துகளையும்+ அவற்றை அனுபவிக்கிற திறனையும் கொடுக்கும்போது, அதைத் தனக்குக் கிடைக்கும் பலனாக அவன் நினைக்க வேண்டும்; தன் கடின உழைப்பைக் குறித்து சந்தோஷப்பட வேண்டும். இது கடவுள் தரும் பரிசு.+

  • ஏசாயா 65:21, 22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 ஜனங்கள் வீடுகளைக் கட்டி அதில் குடியிருப்பார்கள்.+

      திராட்சைத் தோட்டங்களை அமைத்து அதன் பழங்களைச் சாப்பிடுவார்கள்.+

      22 ஒருவர் கட்டும் வீட்டில் இன்னொருவர் குடியிருக்க மாட்டார்.

      ஒருவருடைய தோட்டத்தின் விளைச்சலை இன்னொருவர் சாப்பிட மாட்டார்.

      ஏனென்றால், மரத்தின் ஆயுள் காலத்தைப் போல என் ஜனங்களின் ஆயுள் காலமும் இருக்கும்.+

      நான் தேர்ந்தெடுத்த ஜனங்கள் தங்கள் உழைப்பின் பலனை முழுமையாக அனுபவிப்பார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்