12 அந்தப்புரத்துக்குக் கொண்டுவரப்பட்ட பெண்களுக்கு, முதல் ஆறு மாதங்கள் வெள்ளைப்போள+ தைலத்தாலும், அடுத்த ஆறு மாதங்கள் பரிமளத் தைலத்தாலும் விதவிதமான வாசனைத் தைலங்களாலும்+ அழகு சிகிச்சை செய்யப்படும். அந்த 12 மாதங்களுக்குப் பின்பு ஒவ்வொரு பெண்ணாக அகாஸ்வேரு ராஜாவிடம் கொண்டுபோகப்படுவார்கள்.