-
உபாகமம் 28:49-51பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
49 பூமியின் ஒரு எல்லையில் இருக்கிற தொலைதூர தேசத்தாரை உங்களுக்கு எதிராக யெகோவா அனுப்புவார்.+ அவர்கள் கழுகைப் போல் வேகமாகப் பாய்ந்து வருவார்கள்.+ அவர்களுடைய மொழி உங்களுக்குப் புரியாது.+ 50 பார்க்கவே அவர்கள் பயங்கரமாக இருப்பார்கள். வயதில் பெரியவர்களுக்கு மதிப்புக் காட்டவோ, வயதில் சிறியவர்களுக்குக் கரிசனை காட்டவோ மாட்டார்கள்.+ 51 நீங்கள் அழியும்வரை உங்களுடைய ஆடுமாடுகளின் குட்டிகளையும் உங்கள் நிலத்தில் விளைகிறவற்றையும் அவர்கள் சாப்பிடுவார்கள். உங்களை ஒழித்துக்கட்டும்வரை தானியத்தையோ புதிய திராட்சமதுவையோ எண்ணெயையோ கன்றுகளையோ ஆட்டுக்குட்டிகளையோ உங்களுக்காக விட்டுவைக்க மாட்டார்கள்.+
-
-
எரேமியா 5:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அவர்கள் உங்களுடைய விளைச்சலையும் உணவையும் தின்றுதீர்ப்பார்கள்.+
உங்கள் மகன்களையும் மகள்களையும் கொன்றுவிடுவார்கள்.
உங்கள் ஆடுகளையும் மாடுகளையும் கைப்பற்றுவார்கள்.
உங்கள் திராட்சைக் கொடிகளையும் அத்தி மரங்களையும் வெட்டிப்போடுவார்கள்.
நீங்கள் நம்பியிருக்கிற மதில் சூழ்ந்த நகரங்களைத் தாக்கி நாசமாக்கிவிடுவார்கள்.”
-