உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • மத்தேயு 21:42
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 42 அப்போது இயேசு, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது;+ இது யெகோவாவின்* செயல், இது நம்முடைய கண்களுக்கு அருமையாக இருக்கிறது’+ என்று வேதவசனங்களில் நீங்கள் வாசித்ததே இல்லையா?

  • மத்தேயு 21:44
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 அதோடு, இந்தக் கல்லின் மேல் விழுகிறவன் சின்னாபின்னமாவான்.+ இது யார்மேல் விழுகிறதோ அவனை நசுக்கிப்போடும்” என்று சொன்னார்.+

  • லூக்கா 20:17, 18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 ஆனால், இயேசு நேராக அவர்களைப் பார்த்து, “‘கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது’+ என்று எழுதப்பட்ட வேதவசனத்தின் அர்த்தம் என்ன? 18 இந்தக் கல்லின் மேல் விழுகிற எவனும் சின்னாபின்னமாவான்.+ இது யார்மேல் விழுகிறதோ அவனை நசுக்கிப்போடும்” என்று சொன்னார்.

  • ரோமர் 9:31-33
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 31 ஆனால் இஸ்ரவேலர்கள் திருச்சட்டத்தின் அடிப்படையில் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்தபோதிலும், நீதிமான்களாகவில்லை. 32 ஏன்? ஏனென்றால், அவர்கள் விசுவாசத்தால் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்யாமல், செயல்களால் நீதிமான்களாவதற்கு முயற்சி செய்தார்கள். “தடைக்கல்” மீது அவர்கள் தடுக்கி விழுந்தார்கள்.+ 33 இதைப் பற்றித்தான், “இதோ! தடைக்கல்லை,+ அதாவது தடுக்கி விழ வைக்கும் கற்பாறையை, நான் சீயோனில் வைக்கிறேன். அதன்மீது விசுவாசம் வைக்கிறவன் ஏமாற்றம் அடைய மாட்டான்”+ என்று எழுதப்பட்டிருக்கிறது.

  • 1 கொரிந்தியர் 1:23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 23 நாமோ மரக் கம்பத்தில் அறைந்து கொல்லப்பட்ட கிறிஸ்துவைப் பற்றிப் பிரசங்கிக்கிறோம்; அந்தச் செய்தி யூதர்களுக்குத் தடைக்கல்லாகவும் மற்ற தேசத்து மக்களுக்கு முட்டாள்தனமாகவும் இருக்கிறது.+

  • 1 பேதுரு 2:7, 8
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 அதனால், விசுவாசிகளாக* இருக்கிற உங்களுக்கு அவர் மதிப்புள்ளவராக இருக்கிறார். ஆனால் விசுவாசிகளாக இல்லாதவர்களுக்கு, “கட்டிடம் கட்டுகிறவர்கள் ஒதுக்கித்தள்ளிய+ கல்லே மூலைக்குத் தலைக்கல்லாக ஆனது.”+ 8 அதோடு, “தடைக்கல்லாகவும், தடுக்கிவிழ வைக்கும் கற்பாறையாகவும் ஆனது.”+ கடவுளுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படியாததால்தான் அவர்கள் தடுக்கி விழுகிறார்கள்; அதுதான் அப்படிப்பட்டவர்களுக்கு வரப்போகும் முடிவு.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்