21 பின்பு, மோசே தன்னுடைய கையைக் கடலுக்கு நேராக நீட்டினார்.+ யெகோவா ராத்திரி முழுவதும் கிழக்கிலிருந்து பலத்த காற்றை வீச வைத்து, கடலை இரண்டாகப் பிளந்தார்.+ தண்ணீர் இரண்டு பக்கங்களிலும் பிரிந்து நின்றது. நடுவிலே காய்ந்த தரை தெரிந்தது.+
27 உடனே மோசே கடலுக்கு நேராகத் தன் கையை நீட்டினார். பொழுது விடிய ஆரம்பித்தபோது, கடல்நீர் பழைய நிலைக்குத் திரும்பியது. எகிப்தியர்கள் அங்கிருந்து தப்பித்துப்போக முயற்சி செய்தார்கள். ஆனால், யெகோவா அவர்களைக் கடலுக்குள் மூழ்கடித்தார்.+