24 அப்போது யெகோவா சோதோம், கொமோராவில் நெருப்பையும் கந்தகத்தையும் கொட்டினார். யெகோவா வானத்திலிருந்து அவற்றைக் கொட்டி,+25 அந்த நகரங்களை அழித்தார். ஜனங்கள், செடிகொடிகள் என எதையும் விட்டுவைக்காமல் முழு பிரதேசத்தையும் அழித்தார்.+
40 “சோதோமையும் கொமோராவையும்+ அவற்றைச் சுற்றியிருந்த ஊர்களையும்+ நான் அழித்தது போலவே பாபிலோனையும் அழிப்பேன். அங்கே இனி யாரும் குடியிருக்க மாட்டார்கள். மனுஷ நடமாட்டமே இருக்காது”+ என்று யெகோவா சொல்கிறார்.