8 இதனால், நான் சத்தமாக அழுது புலம்புவேன்.+
காலில் செருப்பு இல்லாமலும் உடம்பில் துணி இல்லாமலும் நடப்பேன்.+
நரியைப் போல ஊளையிடுவேன்.
நெருப்புக்கோழியைப் போல அலறுவேன்.
9 அவளுடைய காயம் ஆறாது.+
அது யூதா வரைக்கும் பரவியிருக்கிறது.+
அழிவு என் ஜனங்களுடைய நுழைவாசலுக்கு வந்துவிட்டது, எருசலேமை எட்டிவிட்டது.+