-
யோசுவா 4:21-24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 பின்பு அவர் இஸ்ரவேலர்களிடம், “‘இந்தக் கற்கள் ஏன் இங்கே இருக்கின்றன?’ என்று எதிர்காலத்தில் உங்கள் பிள்ளைகள் கேட்டால்,+ 22 நீங்கள் அவர்களிடம், ‘இஸ்ரவேலர்கள் உலர்ந்த தரையில் யோர்தானைக் கடந்தார்கள்.+ 23 அவர்கள் செங்கடலைக் கடந்தபோது நம் கடவுளாகிய யெகோவா அதை வற்றிப்போக வைத்தது போலவே, யோர்தானைக் கடந்தபோதும் நம் கடவுளாகிய யெகோவா அதை வற்றிப்போக வைத்தார்.+ 24 யெகோவா எவ்வளவு பலம்படைத்தவர் என்பதைப் பூமியிலுள்ள எல்லாரும் தெரிந்துகொள்வதற்காகவும்,+ நீங்கள் என்றென்றும் நம் கடவுளாகிய யெகோவாவுக்குப் பயந்து நடப்பதற்காகவும் அப்படிச் செய்தார்’ என்று சொல்ல வேண்டும்” என்றார்.
-