33 பல தேசங்களுக்கு உங்களைச் சிதறிப்போகப் பண்ணுவேன்.+ நான் உருவி வீசும் வாள் உங்களைத் துரத்தும்.+ உங்கள் தேசம் பாழாக்கப்படும்,+ உங்கள் நகரங்கள் சின்னாபின்னமாகும்.
2 “இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: ‘எருசலேமையும் யூதாவின் நகரங்களையும் நான் எப்படி அழித்திருக்கிறேன் என்று நீங்களே பார்த்திருக்கிறீர்கள்.+ இன்று அவை பாழாய்க் கிடக்கின்றன. அங்கே மனுஷ நடமாட்டமே இல்லை.+