2 “நீ ஒரு சுருளை எடுத்து, நான் இஸ்ரவேலுக்கும் யூதாவுக்கும்+ எல்லா தேசங்களுக்கும்+ எதிராகச் சொன்னதையெல்லாம் எழுது. யோசியாவின் காலத்தில் நான் உன்னிடம் முதன்முதலாகப் பேசிய நாளிலிருந்து இந்த நாள்வரை+ சொன்னதையெல்லாம் எழுது.
4 உடனே எரேமியா, நேரியாவின் மகனாகிய பாருக்கைக் கூப்பிட்டு+ யெகோவா சொன்ன எல்லா விஷயங்களையும் சொன்னார். அவர் சொல்லச் சொல்ல பாருக் அதையெல்லாம் ஒரு சுருளில் எழுதினார்.+