5 ஆனால், கல்தேயர்களின் வீரர்கள் அவர்களைத் துரத்திக்கொண்டு போய், எரிகோவின் பாலைநிலத்திலே சிதேக்கியாவைப் பிடித்தார்கள்.+ அவரை காமாத்திலிருந்த+ ரிப்லாவுக்குக் கொண்டுபோய் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் முன்னால் நிறுத்தினார்கள்.+ ராஜா அவருக்குத் தண்டனை விதித்தான்.