48 யாக்கோபின் வம்சத்தாரே, இதைக் கேளுங்கள்.
நீங்கள் இஸ்ரவேல் என்ற பெயரில் அழைக்கப்படுகிறீர்கள்.+
நீங்கள் யூதாவின் ஊற்றிலிருந்து வந்தவர்கள்.
நீங்கள் யெகோவாவின் பெயரில் சத்தியம் செய்கிறீர்கள்.+
இஸ்ரவேலின் கடவுளை வணங்குகிறீர்கள்.
ஆனாலும், அதையெல்லாம் உண்மையோடும் நீதியோடும் செய்வதில்லை.+
2 நீங்கள் பரிசுத்த நகரத்தைச்+ சேர்ந்தவர்கள் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்.
இஸ்ரவேலின் கடவுளுடைய உதவியைத் தேடுகிறீர்கள்.+
பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.