3 இருட்டில் மறைத்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும்,
ரகசிய இடங்களில் ஒளித்து வைக்கப்பட்ட பொக்கிஷங்களையும் உனக்குத் தருவேன்.+
அப்போது, இஸ்ரவேலின் கடவுளான யெகோவா நான்தான் என்றும்,
உன்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுகிறவர் நான்தான்+ என்றும் நீ புரிந்துகொள்வாய்.