-
ஏசாயா 65:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 பிடிவாதமான ஜனங்களைப்+ பார்த்து நாளெல்லாம் என் கைகளை நீட்டிக்கொண்டிருக்கிறேன்.
அவர்கள் மனம்போன போக்கில் போய்,+
கெட்ட காரியங்களைச் செய்கிறார்கள்.+
-
எசேக்கியேல் 20:8பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
8 ஆனால், அவர்கள் எனக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். என் பேச்சைக் கேட்கவே இல்லை. அவர்களுடைய கண் முன்னால் இருந்த அருவருப்பான சிலைகளைத் தூக்கியெறியவில்லை. எகிப்திலுள்ள அருவருப்பான தெய்வங்களை விட்டுவிடவில்லை.+ அதனால், எகிப்து தேசத்தில் நான் அவர்கள்மேல் என் கோபத்தையும் ஆக்ரோஷத்தையும் கொட்டித் தீர்ப்பேன் என்று சொன்னேன்.
-
-
சகரியா 7:11, 12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 ஆனால், அவர்கள் அதையெல்லாம் கேட்கவே இல்லை.+ முரட்டுப் பிடிவாதத்தோடு நடந்துகொண்டார்கள்.+ காதை அடைத்துக்கொண்டார்கள்.+ 12 தங்களுடைய இதயத்தை வைரம்போல்* கடினமாக்கினார்கள்.+ பரலோகப் படைகளின் யெகோவா தன்னுடைய சக்தியால் தீர்க்கதரிசிகள் மூலம் சொன்ன வார்த்தைகளுக்கும் சட்டத்துக்கும்* அவர்கள் கீழ்ப்படியவில்லை.+ அதனால், பரலோகப் படைகளின் யெகோவா பயங்கர கோபத்தோடு அவர்களைத் தண்டித்தார்”+ என்றார்.
-
-
-