4 யெகோவா சொல்வது இதுதான்:
‘யூதா திரும்பத் திரும்பக் குற்றம் செய்ததால்+ என் தீர்ப்பை மாற்றிக்கொள்ளவே மாட்டேன்.
யூதா ஜனங்கள் யெகோவாவின் சட்டத்தை ஒதுக்கித்தள்ளினார்கள்.
அவருடைய விதிமுறைகளை அசட்டை செய்தார்கள்.+
முன்னோர்கள் நம்பிய அதே பொய்களை நம்பி வழிவிலகிப் போனார்கள்.+