-
எரேமியா 17:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீங்கள் ஓய்வுநாளில் இந்த நகரத்தின் நுழைவாசல்கள் வழியாக எந்தச் சரக்குகளையும் கொண்டுவரக் கூடாது. ஓய்வுநாளில் எந்த வேலையும் செய்யாமல் அதைப் புனிதமான நாளாக அனுசரிக்க வேண்டும்.+ நான் சொல்வதையெல்லாம் நீங்கள் அப்படியே கேட்டு நடந்தால், 25 தாவீதின் சிம்மாசனத்தில்+ உட்காருகிற ராஜாக்களும் இளவரசர்களும் இந்த நகரத்தின் நுழைவாசல்கள் வழியாக ரதங்களிலும் குதிரைகளிலும் வருவார்கள். அவர்களோடு யூதா ஜனங்களும் எருசலேம் ஜனங்களும் வருவார்கள்.+ இந்த நகரத்தில் எப்போதுமே ஜனங்கள் குடியிருப்பார்கள்.
-