-
உபாகமம் 13:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவு காண்கிறவனைக் கொன்றுபோட வேண்டும்.+ ஏனென்றால், எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை மீறி நடப்பதற்கு அவன் உங்களைத் தூண்டினான். உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்ன வழியைவிட்டு விலகும்படி உங்களைத் தூண்டினான். அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+
-
-
எரேமியா 29:32பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நெகெலாமைச் சேர்ந்த செமாயாவையும் அவன் சந்ததியையும் நான் தண்டிப்பேன். அவர்களில் ஒருவன்கூட என்னுடைய ஜனங்களோடு சேர்ந்து தப்பிக்க மாட்டான். என் ஜனங்களுக்கு நான் கொடுக்கும் ஆசீர்வாதங்களை அவன் பார்க்க மாட்டான். ஏனென்றால், யெகோவாவாகிய எனக்குக் கீழ்ப்படியாமல் போகும்படி அவன் ஜனங்களைத் தூண்டியிருக்கிறான்’ என்று யெகோவா சொல்கிறார்.”’”
-