-
உபாகமம் 13:1-5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 பின்பு அவர், “உங்கள் நடுவிலிருக்கும் ஒரு தீர்க்கதரிசியோ, கனவுகளைப் பார்த்து எதிர்காலத்தைச் சொல்கிறவனோ உங்களுக்கு ஒரு அடையாளத்தை அல்லது அற்புதத்தைக் காட்டுவதாகச் சொல்லலாம். 2 அந்த அடையாளமோ அற்புதமோ நடக்கலாம். உங்களுக்குத் தெரியாத ‘வேறு தெய்வங்களைத் தேடிப்போய் அவற்றை வணங்குவோம், வாருங்கள்’ என்று அவன் உங்களிடம் சொல்லலாம். 3 ஆனால், அந்தத் தீர்க்கதரிசியோ கனவு காண்கிறவனோ சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாது.+ ஏனென்றால், உங்கள் கடவுளாகிய யெகோவாமேல் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் அன்பு காட்டுகிறீர்களா+ என்று உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களைச் சோதித்துப் பார்க்கிறார்.+ 4 உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வழியில் நீங்கள் நடக்க வேண்டும், அவருக்குப் பயப்பட வேண்டும், அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும், அவருடைய பேச்சைக் கேட்க வேண்டும், அவரையே வணங்க வேண்டும், அவரையே உறுதியாகப் பிடித்துக்கொள்ள வேண்டும்.+ 5 அந்தத் தீர்க்கதரிசியை அல்லது கனவு காண்கிறவனைக் கொன்றுபோட வேண்டும்.+ ஏனென்றால், எகிப்தில் அடிமைகளாக இருந்த உங்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்த உங்கள் கடவுளாகிய யெகோவாவின் பேச்சை மீறி நடப்பதற்கு அவன் உங்களைத் தூண்டினான். உங்கள் கடவுளாகிய யெகோவா சொன்ன வழியைவிட்டு விலகும்படி உங்களைத் தூண்டினான். அதனால், தீமையை உங்கள் நடுவிலிருந்து ஒழித்துக்கட்ட வேண்டும்.+
-
-
எரேமியா 28:11-17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 பின்பு எல்லா ஜனங்களுக்கும் முன்பாக, “யெகோவா சொல்வது இதுதான்: ‘இதேபோல், இரண்டே வருஷத்தில் பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாரின் நுகத்தடியை எல்லா தேசத்தாருடைய கழுத்திலிருந்தும் நான் எடுத்து உடைத்துப்போடுவேன்’”+ என்று சொன்னான். அப்போது, எரேமியா தீர்க்கதரிசி அங்கிருந்து கிளம்பிப் போனார்.
12 அனனியா தீர்க்கதரிசி எரேமியா தீர்க்கதரிசியின் கழுத்திலிருந்த நுகத்தடியை எடுத்து உடைத்துப்போட்ட சம்பவத்துக்குப் பின்பு யெகோவா எரேமியாவிடம் இப்படிச் சொன்னார்: 13 “நீ அனனியாவிடம் போய், ‘யெகோவா சொல்வது இதுதான்: “நீ மர நுகத்தடிகளை உடைத்தாய்.+ ஆனால், அவற்றுக்குப் பதிலாக இரும்பு நுகத்தடிகளை உண்டாக்குவாய்.” 14 இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “பாபிலோன் ராஜாவான நேபுகாத்நேச்சாருக்கு அடிபணியும்படி இந்த எல்லா தேசத்தார்மேலும் நான் இரும்பு நுகத்தடியை வைப்பேன். அவர்கள் அவனுக்கு அடிபணிய வேண்டும்.+ காட்டு மிருகங்களைக்கூட நான் அவனுக்கு அடிபணிய வைப்பேன்”’+ என்று சொல்ல வேண்டும்.”
15 பின்பு எரேமியா தீர்க்கதரிசி அனனியா தீர்க்கதரிசியிடம்,+ “அனனியாவே, தயவுசெய்து கேள்! யெகோவா உன்னை அனுப்பவில்லை. நீ பொய் பேசி இந்த ஜனங்களை ஏமாற்றியிருக்கிறாய்.+ 16 அதனால் யெகோவா சொல்வது இதுதான்: ‘நான் உன்னை இந்த உலகத்திலிருந்தே ஒழித்துக்கட்டுவேன். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போக நீ ஜனங்களைத் தூண்டியதால் இந்த வருஷமே செத்துப்போவாய்’”+ என்று சொன்னார்.
17 அதன்படியே, அனனியா தீர்க்கதரிசி அந்த வருஷம் ஏழாம் மாதம் இறந்துபோனான்.
-