-
எபிரெயர் 8:10-12பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 ‘அந்த நாட்களுக்குப் பின்பு நான் இஸ்ரவேல் ஜனங்களோடு செய்யப்போகிற ஒப்பந்தம் இதுதான்’ என்று யெகோவா* சொல்கிறார். ‘நான் அவர்களுடைய மனதில் என் சட்டங்களை வைப்பேன், அவர்களுடைய இதயத்தில் அவற்றை எழுதுவேன்.+ நான் அவர்களுடைய கடவுளாக இருப்பேன், அவர்கள் என்னுடைய ஜனங்களாக இருப்பார்கள்.+
11 அதுமுதல் அவர்கள் யாரும் தங்களுடைய சக குடிமகனிடமோ தங்கள் சகோதரனிடமோ, “யெகோவாவை* பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!” என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள். 12 அவர்களுடைய அநீதியான செயல்களை இரக்கத்தோடு நான் மன்னிப்பேன், அவர்களுடைய பாவங்களை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்’ என்றும் அவர் சொல்கிறார்.”+
-
-
எபிரெயர் 9:15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 அதனால்தான், கிறிஸ்து ஒரு புதிய ஒப்பந்தத்தின் மத்தியஸ்தராக+ ஆகியிருக்கிறார். கடவுளால் அழைக்கப்பட்டவர்கள் வாக்குறுதி கொடுக்கப்பட்ட முடிவில்லாத வாழ்வை* பெறுவதற்காக+ அப்படி மத்தியஸ்தராக ஆகியிருக்கிறார். அவருடைய மரணத்தின் மூலம்தான் இது சாத்தியமாகி இருக்கிறது; அவருடைய மரணத்தின் மூலம்தான் முந்தின ஒப்பந்தத்தின்கீழ் செய்த குற்றங்களிலிருந்து ஒரு மீட்புவிலையால்+ அவர்கள் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
-