உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • சங்கீதம் 85:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 உங்களுடைய மக்கள் செய்த குற்றத்தை மன்னித்தீர்கள்.

      அவர்கள் செய்த எல்லா பாவத்தையும் மன்னித்தீர்கள்.+ (சேலா)

  • ஏசாயா 40:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  2 “எருசலேம் ஜனங்களின் உள்ளத்தைத் தொடும் விதத்தில்* பேசுங்கள்.

      அவர்களுடைய கஷ்ட காலம் முடிந்தது என்று சொல்லுங்கள்.

      அவர்கள் செய்த குற்றங்களுக்கான தண்டனை கொடுக்கப்பட்டது.+

      அவர்கள் செய்த பாவங்களுக்கான கூலியை யெகோவாவின் கையிலிருந்து முழுமையாக* வாங்கிவிட்டார்கள்.”+

  • ஏசாயா 43:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நீ செய்த குற்றத்தையெல்லாம் துடைத்து அழிக்கிறவர் நான்தான்;+ என்னுடைய பெயருக்காகத்தான் இதைச் செய்கிறேன்.+

      நீ செய்த பாவத்தையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டிருக்க மாட்டேன்.+

  • எரேமியா 31:34
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 34 “அதுமுதல் அவர்கள் யாரும் தங்களுடைய சகோதரனிடமோ மற்றவர்களிடமோ, ‘யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளுங்கள்!’+ என்று சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், சிறியோர்முதல் பெரியோர்வரை எல்லாரும் என்னைப் பற்றித் தெரிந்து வைத்திருப்பார்கள்.+ நான் அவர்களுடைய குற்றத்தை மன்னிப்பேன். அவர்களுடைய பாவத்தை இனியும் நினைத்துப் பார்க்க மாட்டேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.

  • மீகா 7:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.

      உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+

      நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.

      ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+

  • சகரியா 13:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 “அந்த நாளில், தாவீதின் வம்சத்தாரிடமும் எருசலேம் ஜனங்களிடமும் உள்ள பாவத்தையும் தீட்டையும் நீக்குவதற்காக ஒரு கிணறு வெட்டப்படும்.”+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்