-
2 நாளாகமம் 36:15, 16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
15 இருந்தாலும், அவர்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவா தன்னுடைய மக்களையும் ஆலயத்தையும் நினைத்து பரிதாபப்பட்டு, தன்னுடைய தூதுவர்களை அனுப்பி அவர்களை எச்சரித்தார். திரும்பத் திரும்ப எச்சரித்துக்கொண்டே இருந்தார். 16 ஆனால், உண்மைக் கடவுள் அனுப்பிய தூதுவர்களை அவர்கள் கேலி செய்துகொண்டே இருந்தார்கள்.+ அவருடைய வார்த்தைகளை அலட்சியம் செய்தார்கள்,+ அவருடைய தீர்க்கதரிசிகளைக் கிண்டல் செய்தார்கள்.+ திருத்தவே முடியாத அளவுக்கு மோசமானார்கள். அதனால், யெகோவாவுக்கு அவருடைய மக்கள்மேல் பயங்கர கோபம் வந்தது.+
-
-
தானியேல் 9:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 உங்கள் ஜனங்களாகிய நாங்கள் செய்த பாவங்களினாலும் எங்கள் முன்னோர்கள் செய்த தவறுகளினாலும் சுற்றியுள்ளவர்கள் எருசலேம் நகரத்தையும் எங்களையும் பழித்துப் பேசுகிறார்கள்.+ யெகோவாவே, நீங்கள் எப்போதும் நீதியாக நடந்துகொள்பவர்.+ அதனால், இப்போதும் பரிசுத்த மலையாகிய எருசலேம் நகரத்தின் மேலுள்ள கடும் கோபத்தைத் தயவுசெய்து விட்டுவிடுங்கள்.
-