18 “எசேக்கியா ராஜா+ யூதாவை ஆட்சி செய்த காலத்தில் மொரேசாவைச் சேர்ந்த மீகா+ என்பவர் தீர்க்கதரிசனம் சொல்லிவந்தார். அவர் யூதா ஜனங்களிடம், ‘பரலோகப் படைகளின் யெகோவா சொல்வது இதுதான்:
“வயலைப் போல சீயோன் உழப்படும்.
எருசலேம் மண்மேடாகும்.+
ஆலயம் இருக்கிற மலை அடர்ந்த காடாகும்”’+
என்று சொன்னார்.