-
எசேக்கியேல் 25:12, 13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
12 உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: ‘ஏதோம் மிகப் பெரிய குற்றம் செய்திருக்கிறது. அது யூதா ஜனங்களைப் பழிவாங்கியிருக்கிறது.+ 13 அதனால், உன்னதப் பேரரசராகிய யெகோவா சொல்வது இதுதான்: “நான் ஏதோமைத் தண்டித்து, மனுஷர்களோ மிருகங்களோ இல்லாதபடி அதை வெறிச்சோடிப்போக வைப்பேன்.+ தேமானிலிருந்து தேதான்வரை இருக்கிற எல்லாரும் வாளால் வெட்டிச் சாய்க்கப்படுவார்கள்.+
-
-
எசேக்கியேல் 36:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 உன்னதப் பேரரசராகிய யெகோவா அவற்றுக்குச் சொல்வது இதுதான்: ‘மற்ற தேசங்களுக்கும் ஏதோம் முழுவதுக்கும் எதிராக நான் பயங்கர கோபத்தோடு* தீர்ப்பு சொல்வேன்.+ ஏனென்றால், என்னுடைய தேசத்தைச் சூறையாடவும் அதன் மேய்ச்சல் நிலங்களைக் கைப்பற்றவும் அவர்கள் துடித்தார்கள். மிகுந்த ஏளனத்தோடும், தலைகால் புரியாத சந்தோஷத்தோடும்+ என்னுடைய தேசத்தைச் சொந்தம் கொண்டாடினார்கள்.’”’+
-