29 ஆலயத்தில் உள்ள எல்லா சுவர்களிலும், அதாவது உட்புற அறையிலும் வெளிப்புற அறையிலும் இருக்கிற எல்லா சுவர்களிலும், கேருபீன்கள்,+ பேரீச்ச மரங்கள்,+ விரிந்த பூக்கள் ஆகியவற்றின் வடிவங்கள் செதுக்கப்பட்டிருந்தன.+
36 கழுத்துப் பகுதியில் இருந்த சட்டங்கள்மீதும் சுற்றுப்பக்கங்கள்மீதும் கேருபீன்கள், சிங்கங்கள், பேரீச்ச மரங்கள் ஆகியவற்றின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. எவ்வளவு இடம் இருந்ததோ அதைப் பொறுத்து இந்த உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன. சுற்றிலும் தோரண வடிவில் வேலைப்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.+
16 காவல் அறைகளிலும், வாசல்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த சதுரத் தூண்களிலும் குறுகலான சட்டங்களுள்ள ஜன்னல்கள் இருந்தன.+ நுழைவு மண்டபங்களுடைய உட்புறத்தின் இரண்டு பக்கங்களிலும் ஜன்னல்கள் இருந்தன. சதுரத் தூண்களில் பேரீச்ச மரத்தின் உருவங்கள் இருந்தன.+