2 உடனடியாகக் கடவுளுடைய சக்தி என்மேல் வந்தது. இதோ! பரலோகத்தில் ஒரு சிம்மாசனம் இருந்தது; அந்தச் சிம்மாசனத்தில் ஒருவர் உட்கார்ந்திருந்தார்.+ 3 அவருடைய தோற்றம் சூரியகாந்தக் கல்+ போலவும் சுநீரம் போலவும் இருந்தது. சிம்மாசனத்தைச் சுற்றி ஒரு வானவில் இருந்தது. அது பார்ப்பதற்கு மரகதம்போல் இருந்தது.+