2 நான் பார்த்துக்கொண்டிருந்தபோது, நெருப்புபோல் ஒருவர் தெரிந்தார். அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்குக் கீழாக நெருப்பு எரிந்துகொண்டிருந்தது.+ அவருடைய இடுப்புபோல் தெரிந்த பாகத்துக்கு மேலாக, வெள்ளியும் தங்கமும் கலந்த உலோகத்தைப் போலப் பிரகாசமாக இருந்தது.+