13 அந்த நாளில், ஒரு பெரிய ஊதுகொம்பு ஊதப்படும்.+ எகிப்தில் சிதறியிருக்கிறவர்களும்+ அசீரியாவில் தினம்தினம் செத்துப்பிழைக்கிறவர்களும்+ எருசலேமிலுள்ள பரிசுத்தமான மலைக்கு வந்து யெகோவாவை வணங்குவார்கள்.+
16 “தொலைந்துபோனதை நான் தேடிப்போவேன்,+ வழிமாறிப்போனதைக் கண்டுபிடித்துக் கொண்டுவருவேன், காயப்பட்டதுக்குக் கட்டு போடுவேன், துவண்டுபோனதைத் தெம்பாக்குவேன். ஆனால், கொழுத்ததையும் புஷ்டியானதையும் வெட்டிப்போடுவேன். அவற்றுக்குச் சரியான தண்டனை கொடுப்பேன்.”